முன்னாள் முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு கடூழிய சிறைத்தண்டனை
வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் உள்ளிட்ட இருவருக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (02) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி, முன்னாள் முதலமைச்சரான எஸ்.எம்.ரஞ்சித் (S.M. Ranjith) மற்றும் அவரது பிரத்தியேக செயலாளரான சாந்தி சந்திரசேன (Shanthi Chandrasena) ஆகியோருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வழக்கு தாக்கல்
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் (CIABOC) தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் ஆகியோர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலே குறித்த இருவருக்கும் 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் தலா 200,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
வடமத்திய மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் சட்டவிரோதமாக எரிபொருள் கொடுப்பனவாக 2,080,500 ரூபாவை பெற்றுக் கொண்டதன் ஊடாக ஊழல் இடம்பெற்றுள்ளதாக பிரதிவாதிகள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
You may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

