ஹமாஸ் அமைப்பை எதிர்த்தவர்களுக்கு நேர்ந்த கதி
கடந்த 2007 முதல் காசாவை ஹமாஸ் நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் தற்போது காசாவில் அந்த அமைப்பிற்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை ஒடுக்க ஹமாஸ் தீவிரமான அடக்குமுறையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன்படி போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கு பொதுவெளியில் வைத்து சாட்டையடி கொடுக்கப்பட்டதாகவும், 6 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் போராட்டம் நடத்தியவர்களில் பலர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.
கொல்லப்பட்ட இளைஞரை வீட்டுக்கு வெளியே விட்டுச் சென்ற கொடூரம்
கொல்லப்பட்ட ஆறு பேரில் 22 வயதான இளைஞர் நாசர் ராபியாஸ் என்பவரும் ஒருவர. இவர் காசாவின் டெல் அவிவ் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தவர். கொல்லப்பட்ட பின்னர் அவரது உடலை அவரின் வீட்டின் வெளியே ஹமாஸ் விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்து இதழான டெலிகிராப் -க்கு ராமல்லாவை சேர்ந்த மூத்த காவல்த்துறை அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில், "ஹமாஸ் மக்களை கொடூரமான முறையில் ஒடுக்குகின்றனர். கழுத்தில் கயிறு கட்டப்பட்ட நாய்க்குட்டியைப் போல, அவர்கள் அவரை (கொல்லப்பட்டஇளைஞரை) அவரது வீட்டு வாசலுக்கு இழுத்துச் சென்று, ஹமாஸை எதிர்ப்பவர்களுக்கு இதுதான் தண்டனை என்று அவரது குடும்பத்தினரிடம் கூறினர்" என்று தெரிவித்துள்ளார்.
"எதிர்ப்பு தெரிவிக்கத் துணிந்த 22 வயது பாலஸ்தீனியர்" கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் அதிகாரபூர்வ X பக்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தடிகளாலும், உலோகக் கம்பிகளாலும் தாக்கப்பட்டார்
மேலும் இஸ்ரேலிய செய்தி நிறுவனம் ஒன்று, அவர் (கொல்லப்பட்டஇளைஞரை) கழுத்தில் கயிறு கட்டி இழுத்துச் செல்லப்பட்டு, மக்கள் முன்னிலையில் தடிகளாலும், உலோகக் கம்பிகளாலும் தாக்கப்பட்டார் என்று பெயர் வெளியிட விரும்பாத காசாவைச் சேர்ந்த ஒருவர் கூறியதாக தெரிவித்துள்ளது.
2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளிலும் ஹமாஸை எதிர்த்து காசாவில் கிளர்ச்சிகள் நடந்தன. ஆனால் அவற்றை ஹமாஸ் கடுமையான அடக்குமுறையால் கட்டுப்படுத்தியாக நம்பப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

