ட்ரம்ப் விதிக்கும் வரியால் பாதிக்கப்படவுள்ள நாடுகள் எவை தெரியுமா…!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(donald trump) விதித்துள்ள வரிவிதிப்பு பல்வேறு நாடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று ட்ரம்ப்பின் அரசு தெரிவித்தபோதிலும் இந்த வரிவிதிப்பால் பல நாடுகள் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் உள்ளன.
அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருள்களுக்கு அமெரிக்காவும் பரஸ்பரம் அதே அளவு வரி விதிக்கும்படி இன்று 2-ஆம் திகதிமுதல் இந்த பரஸ்பர வரி விதிப்பு நடைமுறைக்கு வரும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்தியா உள்ளிட்ட 15 நாடுகள் கடுமையான விளைவுகளை சந்திக்கும்
அதன்படி, இந்தியா உள்ளிட்ட 15 நாடுகள் கடுமையான விளைவுகளை சந்திக்கும் நிலையில் உள்ளன. ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பாக அலுமினியம், இரும்பு மீது அதிக வரியை விதித்திருக்கிறார்.
மருந்துகள், மின்சார பொருள்கள் மீதும் கடுமையான வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆட்டோமொபைல்ஸ் மீதான வரிவிதிப்பு வரும் 4 ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.
ட்ரம்பின் வரிவிதிப்பால் பாதிப்படையும் நாடுகள் வருமாறு, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், மெக்சிகோ ,வியட்நாம், அயர்லாந்து ,ஜெர்மனி ,தைவான், ஜப்பான், தென்கொரியா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
