பாம்பன் தெற்கு கடலில் மாயமான கடற்றொழிலாளர்கள்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
பாம்பன் தெற்கு கடல் பகுதியில் மாயமான இரண்டு கடற்றொழிலாளர்களை தேடும் பணியை போர்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்த வேண்டுமென AITUC சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
நேற்று பாம்பன் தெற்கு கடல் பகுதியில் நாட்டுப் படகில் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கடலில் விழுந்து மாயமான இரண்டு வேண்டுமென உடனடியாகக் கண்டுபிடிக்க, தேடுதல் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாம்பன் சின்னப் பாலம் கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை கிராமத்தைச் சேர்ந்த டைசன் ஆகிய இருவரும் நேற்று நாட்டுப் படகில் தொழிலுக்கு சென்ற நிலையில், பாம்பன் தெற்கு கடல் பகுதியில் தொழில் செய்து கொண்டிருந்தபோது கடலில் விழுந்து மாயமாகியுள்ளனர்.
நாட்டுப் படகுகள்
இந்த தகவல் அறிந்ததும், சக கடற்றொழிலாளர்கள் தங்களது நாட்டுப் படகுகள் மூலம் மாயமான இருவரையும் கடலில் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இருப்பினும், தற்போதைய நிலவரப்படி அவர்கள் குறித்து எந்தத் தகவலும் கிடைக்காதது மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, கடலோரக் காவல் படை மற்றும் இந்தியக் கடற்படை உடனடியாகத் தலையிட்டு, உலங்கு வானுர்தி மற்றும் நவீன தேடுதல் கருவிகள் மூலம் தேடுதல் பணிகளை விரிவுபடுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |