சாதாரணதர பரீட்சைக்கு தோற்றி காணாமற்போன மாணவிகள் தொடர்பில் வெளியான தகவல்
க.பொ.த (சா/த) பரீட்சைக்கு தோற்றிய நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (14) நாவலப்பிட்டியவில் இருந்து காணாமல் போன இரண்டு மாணவிகளும் கடுவெலவில் உள்ள அவர்களது உறவினர்களின் வீடு ஒன்றில் இருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வேலைவாய்ப்பை தேடி இவ்விரு மாணவிகளும் கொழும்புக்கு சென்றனர் என்றும், கடுவெல பிரதேசத்தில் உள்ள உறவினரின் வீட்டுக்கு புதன்கிழமை (15) இரவு சென்றுள்ளனர் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மாணவிகள் வீடு திரும்பாத நிலையில்
கினிகத்ஹேனவில் உள்ள அம்பகமுவ தேசிய பாடசாலை பரீட்சை நிலையத்தில் நடைபெற்ற க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சை முடிந்து மாணவிகள் வீடு திரும்பாத நிலையில் இரு மாணவிகளின் பாதுகாவலர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கினிகத்ஹேன காவல் நிலையத்துக்கு
கடுவெல பிரதேசத்தில் இருந்து பாடசாலை மாணவிகள் இருவரும் அவர்களின் உறவினர்களால் கினிகத்ஹேன காவல் நிலையத்துக்கு வியாழக்கிழமை (16) அழைத்துவரப்பட்டனர்.
அவ்விரு மாணவிகளும் அறிவுறுத்தப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று கினிகத்ஹேன காவல்துறையினர் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |