காணாமல் ஆக்கப்பட்ட தனது மகளை தேடிவந்த மற்றுமொரு தந்தை மரணம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தனது மகளை தேடிவந்த மற்றுமொரு தந்தை மரணமடைந்துள்ளார்.
இறுதி யுத்தத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட, இறுதி யுத்தம் நிறைவடைந்த பின்னர் இராணுவத்திடம் ஒப்படைத்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி கடந்த 2009 இறுதி யுத்தம் நிறைவடைந்த காலம் முதல் தேடிவரும் உறவுகள் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் வடக்கு கிழக்கு எங்கும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
நீதி கிடைக்காமல் உயிழப்பு

இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2017.03.08அன்று ஆரம்பித்த தொடர் போராட்டமானது ஆறு ஆண்டுகளைக் கடந்து ஏழாவது ஆண்டாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் கந்தையா திருவா என்ற தனது மகள் 2009 இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட நிலையில், இந்த தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கணபதி கந்தையா என்பவர் இன்று உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு பல பெற்றோர்கள் தமது உறவுகளுக்கான நீதி கிடைக்கப்பெறாமலேயே உயிரிழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.