அனைத்துலக நீதிக்காக சிறிலங்கா புதிய காட்சிப்படுத்தல்
சிறிலங்கா அரசாங்கம் பொய்யுரைப்பதாக குற்றச்சாட்டு
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசாங்கம் பொய்யுரைப்பதாக தமிழர் தாயகத்தில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தில் சில மாற்றங்களை மேற்கொள்ளும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.
இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச, யுத்தத்தின் பின்னர் சிறிலங்கா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட அலுவலகங்களுக்கு சென்று ஆய்வுகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மதியம் 12 மணியளவில் யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்தை வந்தடைந்த அமைச்சருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர், தனது யாழ்ப்பாண விஜயத்தின் நோக்கம் குறித்து இவ்வாறு விளக்கமளித்தார்.
புதிய காட்சிப்படுத்தல்
“விசேடமாக யாழ்ப்பாணத்திற்கு வந்ததற்கான நோக்கம் நீதியமைச்சின் கீழ் பணிபுரியம் அதிகாரிகள் இங்கு சில ஆயத்தங்களை முன்னெடுத்துள்ளனர்.
காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீகளுக்கான அலுவலகம் மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் ஆகியவற்றின் அதிகாரிகள் இந்த ஆயத்தங்களை ஏற்பாடு செய்துள்ளனர்.
எதிர்வரும் நாட்களில் சில செயற்திட்டங்களை யாழ்ப்பாணத்தில் நடைமுறைப்படுத்தவுள்ளோம். இது தொடரபில் அவதானிப்பதுடன், அதன் செயற்பாடுகளை பார்வையிடவுள்ளேன்.
மேலதிகமாக இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளிலும் கலந்துக்கொள்ளவுள்ளேன்.
இந்து பௌத்த கலாசார பேரவையின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இராமச்சந்திரன் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வுகளில் கலந்துக்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
