கம்பளையில் காணாமல்போன பெண் கொன்று புதைப்பு..!
கம்பளை, வெலிகல்ல எல்பிட்டிய பிரதேசத்தில் 22 வயதுடைய இளம் பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இடம் ஒன்றை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
குறித்த பெண் காணாமல் போனமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் இன்று (12) கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை விசாரித்ததில், அவர் அப்பகுதியில் ஆடு வளர்த்து வருவது தெரியவந்துள்ளது.
புதைக்கப்பட்ட சடலம்
ஆடுகளுக்கு புல் வெட்டுவதற்காக சென்ற போது, குறித்த பெண்ணை வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார். அவர் மறுத்ததால், சந்தேக நபர் அவளை காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளார்.
மேலும், அவர் அங்கேயே கொல்லப்பட்டதாகவும், கொலையின் பின்னர் சடலம் அதே இடத்தில் புதைக்கப்பட்டதாகவும், ஆனால் சடலம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த இடத்தை அகழ்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
