யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அவலம்..! இரவிரவாக தொடரும் தேடுதல் - மூவர் சிக்கினர்
Sri Lanka Police
Jaffna
By Vanan
யாழ்ப்பாணம் அச்சுவேலி காவல்துறை பிரிவுக்குட்பட்ட வல்லைப் பாலத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இளைஞரொருவர் தவறி விழுந்து காணாமல் போயுள்ள நிலையில் அவரைத் தேடும் பணி இடம்பெற்று வருகிறது.
இன்று(22) மாலை வேளையில் சில இளைஞர்கள் தூண்டில் போட்டு மீன் பிடியில் ஈடுபட்டனர். இதன்போது ஒரு இளைஞர் தவறி விழவே, ஏனையவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரவிரவாக தொடரும் தேடுதல்
புத்தூர் கலைமதி பகுதியைச் சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க இளைஞரே தவறி விழுந்துள்ள நிலையில், இளைஞரைத் தேடும் பணியில் அச்சுவேலி காவல்துறையினரும் பொதுமக்களும் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.
தப்பிச் சென்றுள்ளவர்களில் மூன்று இளைஞர்கள் பொது மக்களால் பிடிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ஆம் நாள் மாலை திருவிழா

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி