போராட்டத்தில் குதித்த யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம்!
ஒப்புக்கொள்ளப்பட்ட MCA கொடுப்பனவை உடனடியாக வழங்க வேண்டும் கோரிக்கைகளை முன்னிறுத்தி யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டது.
குறித்த வேலை நிறுத்த போராட்டம் இன்றைய தினம் (20.08.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது பின்வரும் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.
வரவு செலவு முன்மொழி
நீக்கிவிடப்பட்ட 20% ஐ உடனடியாக வழங்கு, அதிகரிக்கப்பட்ட இடர் கடனை உடனடியாக வழங்கு, மக்களாட்சி அரசாங்கம் பேச்சுவார்த்தையைத் தவிர்த்து வருகிறது, அதிகரிக்கப்பட்ட வரவு செலவு முன்மொழிவுகளுக்கு பல்கலைக்கழகங்கள் தகுதி இல்லையோ?, UGC தவிசாளர் மீளா துயிலில், பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழு
பாதீட்டில் முன்வைக்கப்பட்டுள்ள சில முன்மொழிவுகளினால், பல்கலைக்கழக ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாகப் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் மங்கள தப்பரேவ தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக பல்கலைக்கழகங்களில் ஆய்வு நடவடிக்கைகள், விரிவுரைகள், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை அனைத்தும் ஸ்தம்பிதம் அடையலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |








நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
