திருகோணமலை வைத்தியசாலைக்கு அதி நவீன இருதய சிகிச்சை வளாகம் : ஜனாதிபதி தலைமையில் அடிக்கல் நாட்டல்

Trincomalee Anura Kumara Dissanayaka Hospitals in Sri Lanka Nalinda Jayatissa
By Independent Writer Sep 16, 2026 02:26 PM GMT
Report
Courtesy: Nickey thomson Nickey

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில், 8 மாடிகளைக் கொண்ட நவீன இருதய சிகிச்சை வளாகம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மருத்துவர் நலிந்த ஜயதிஸ்ஸவின் பங்கேற்புடன் இன்று 16ஆம் திகதி நடைபெற்றது.

சுமார் 2,403 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த வளாகத்தில், இருதய நோய்களை கண்டறிதல், சிகிச்சையளித்தல் மற்றும் அவசரகால மருத்துவப் பராமரிப்பு உள்ளிட்ட நவீன சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

மக்களுக்கான பல்வேறு வசதிகள்

 மேலும், தீவிர சிகிச்சைப் பிரிவு, கெத் லேப், ஆய்வகங்கள், எக்ஸ்-ரே சேவைகள், நூலகம் மற்றும் கேட்போர் கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இங்கு அமைக்கப்படவுள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் திருகோணமலை மாவட்ட மக்கள் மட்டுமன்றி, கிழக்கு மாகாணத்தின் தூரப் பிரதேசங்களில் வாழும் மக்களும் தங்களுக்கு அண்மையிலேயே உயர்தர இருதய சிகிச்சை சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருகோணமலை வைத்தியசாலைக்கு அதி நவீன இருதய சிகிச்சை வளாகம் : ஜனாதிபதி தலைமையில் அடிக்கல் நாட்டல் | Modern Cardiology Complex For Trincomalee Hospital

 குறிப்பாக, அவசர இருதய சிகிச்சை வசதிகள் மேம்படுத்தப்படுவதன் மூலம், நோயாளர்களை தூர மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு மாற்ற வேண்டிய நிலையும் குறையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம் JICA மற்றும் இந்திய அரசாங்கத்தின் கடன் உதவி உள்ளிட்ட நிதியுதவியின் கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல பாடசாலையின் உயர்தர மாணவர்கள் மீது தாக்குதல்…! இளைஞர்குழு அட்டகாசம்…!

பிரபல பாடசாலையின் உயர்தர மாணவர்கள் மீது தாக்குதல்…! இளைஞர்குழு அட்டகாசம்…!

திருகோணமலை மக்களின் நீண்டகால சுகாதாரத் தேவை

இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகள், ஜப்பான் தூதரக அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

திருகோணமலை வைத்தியசாலைக்கு அதி நவீன இருதய சிகிச்சை வளாகம் : ஜனாதிபதி தலைமையில் அடிக்கல் நாட்டல் | Modern Cardiology Complex For Trincomalee Hospital

திருகோணமலை மக்களின் நீண்டகால சுகாதாரத் தேவைகளில் முக்கியமான ஒன்றாக கருதப்படும் இருதய சிகிச்சை வசதிகளை மேம்படுத்தும் இந்தத் திட்டம், கிழக்கு மாகாண சுகாதாரத் துறையில் முக்கிய முன்னேற்றமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

100 கிராமுக்கும் குறைவான போதைப்பொருளுடன் கைதானவர்கள் : நீதியமைச்சரின் அறிவிப்பு

100 கிராமுக்கும் குறைவான போதைப்பொருளுடன் கைதானவர்கள் : நீதியமைச்சரின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016