இலங்கையின் இரு முக்கிய அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (narendra modi) தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியிடமிருந்து ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் நடைமுறைகளை அறிந்து கொண்டு தேர்தல் கண்காணிப்பாளர்களாக தேர்தல் நடவடிக்கைகளுக்கு பங்களிப்பதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பொதுத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் திகதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
பத்து நாடுகளுக்கு அழைப்பு
வெளிநாட்டு அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கு இந்திய தேர்தல் நடைமுறைகள் பற்றிய புரிதலை வழங்குவதற்காக இந்திய ஆளும் கட்சி எடுத்த முடிவின் அடிப்படையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வகையில் பத்து நாடுகளில் உள்ள பதினெட்டு பிரதான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |