நீண்ட நாள் பதவி வகித்த இந்திய பிரதமர் : இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த மோடி
இந்தியாவின் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), இந்தியாவின் இரண்டாவது நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
2014 முதல் இன்று (25.07.2025) வரை தொடர்ந்து 4,078 நாட்கள் இந்தியாவின் பிரதமராகப் பதவி வகித்து வருகிறார்.
அறிக்கைகளின்படி, இதற்கு முன்பு மிக நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகித்தவராக இந்திரா காந்தி விளங்கினார்.
இந்திராகாந்தியின் சாதனை
1966 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி முதல் 1977 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் திகதி வரை இந்திரா காந்தி (Indira Gandhi) தொடர்ச்சியாக பிரதமராகப் பதவி வகித்திருந்தார்.
இந்திரா காந்தி 4,077 நாட்கள் பிரதமராகப் பதவி வகித்த நிலையில் மோடி இன்றுடன் 4,078 நாட்கள் பிரதமராக பதவி வகித்து அவரின் சாதனையை முறியடித்துள்ளார்
இதேபோல், 1947 முதல் 1964 வரை பதவி வகித்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவும் (Jawaharlal Nehru) வரலாற்றில் மிக நீண்ட காலம் பதவி வகித்த முதலாவது இந்திய ஆட்சியாளர் என்று கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
