போர்ச்சூழலில் சிக்கியுள்ள ஒருகோடி இந்திய மக்கள் : வளைகுடா நாடுகளுக்கு நன்றி தெரிவித்த மோடி
மத்திய கிழக்கு போரின் பின்னணியில், அங்கு வசிக்கும் ஒரு கோடிக்கும் அதிகமான இந்தியர்களுக்கு ஆதரவளித்த சவுதி அரேபியா மற்றும் பிற வளைகுடா நாடுகளுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
இன்று (29) நடைபெற்ற 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சி மூலம் இந்திய மக்களிடம் உரையாற்றியபோது பிரதமர் மோடி இந்த நன்றியை வெளியிட்டார்.
உலக எரிபொருள் நெருக்கடி
உலக எரிபொருள் நெருக்கடியை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டு வருவதாகவும், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளைக் கட்டுப்படுத்த அரசு வரிச் சலுகை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

எரிவாயு பற்றாக்குறையைச் சமாளிக்க, குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் துரிதப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தப் போர்ச் சூழலை அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்த வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளைக் கேட்டுக்கொண்ட அவர், நாட்டின் மக்களின் பாதுகாப்பிற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |