பாடசாலை பாடப்புத்தக விநியோகம் : கல்வி அமைச்சின் நடவடிக்கை

Ministry of Education School Children Committee on Public Accounts (COPA)
By Sathangani Jul 04, 2026 06:01 AM GMT
Report

பாடசாலை பாடப்புத்தக கொள்முதல், களஞ்சிய முகாமை, விநியோகம் மற்றும் இருப்பு கட்டுப்பாட்டை மிகவும் சீரமைப்பதற்காக பல புதிய தொழில்நுட்ப நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சு மற்றும் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் இணைந்து இந்த நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் 2021 மற்றும் 2024ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயல்திறன் குறித்து ஆராய்வதற்காக, அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (COPA) அண்மையில் நாடாளுமன்றத்தில் கூடிய போதே இந்த புதிய தொழில்நுட்ப நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன.

இலக்கு வைக்கப்படும் அநுர...! மடகாஸ்கரில் ரகசியமாகத் திரண்ட பாதாள உலகக் கும்பல்

இலக்கு வைக்கப்படும் அநுர...! மடகாஸ்கரில் ரகசியமாகத் திரண்ட பாதாள உலகக் கும்பல்

புதிய கணினி தரவு அமைப்பு 

இதற்கமைய, 2024ஆம் ஆண்டு முதல் அனைத்து பாடசாலைகளினதும் மாணவர் எண்ணிக்கை, தற்போதுள்ள பாடப்புத்தக இருப்பு மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய புத்தகங்கள் பற்றிய விபரங்களை நேரடியாகப் பெற்றுக்கொள்வதற்காக புதிய கணினி தரவு அமைப்பு ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பாடசாலை பாடப்புத்தக விநியோகம் : கல்வி அமைச்சின் நடவடிக்கை | Moe Introduced Measures School Textbook Distribute

அத்துடன், புத்தக விற்பனை நிலையங்களை வலையமைப்பிற்குள் கொண்டு வருதல், பயனர் பெயர் மற்றும் கடவுச்சொற்கள் மூலமான பாதுகாப்பான அணுகல் அமைப்புகளை நிறுவுதல், தரத்தை உறுதிப்படுத்துவதற்கான முறையான ஆய்வு வழிமுறைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் 'ஈ-தக்சலாவ'  இணையத்தளத்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இணையாக இற்றைப்படுத்தும் திட்டங்களும் தற்போது செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நடவடிக்கைகள் மூலம் தற்போதுள்ள குறைபாடுகள் மற்றும் நிதி முறைகேடுகளைக் குறைத்து, பாடப்புத்தக செயல்முறையின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் செயல்திறனை அதிகரிக்க எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ளோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ளோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

 212 மில்லியன் ரூபாய் நிதி முறைகேடு

பாடசாலை பாடப்புத்தக அச்சிடல், விநியோகம் மற்றும் நிதி முகாமை தொடர்பாக கடந்த ஆண்டுகளில் எழுந்த பல பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகளை சரியாகக் கணக்கிடாததால் மேலதிக புத்தக இருப்புக்கள் தேங்குதல், போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்தல் போன்ற விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

பாடசாலை பாடப்புத்தக விநியோகம் : கல்வி அமைச்சின் நடவடிக்கை | Moe Introduced Measures School Textbook Distribute

2002ஆம் ஆண்டில் பாடசாலை பாடப்புத்தக அச்சிடல் தொடர்பாக சுமார் 212 மில்லியன் ரூபாய் நிதி முறைகேடு சம்பந்தமாகத் தொடரப்பட்டிருந்த வழக்கின் தொடர்புடைய அச்சிடல் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்களை தற்போது கண்டறிய முடியாமல் போயுள்ளது என்பதாகும்.

எவ்வாறாயினும், இச்சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், 2006ஆம் ஆண்டில் பாடப்புத்தகங்களை உரிய காலத்திற்குள் வழங்கத் தவறிய அச்சிடல் நிறுவனம் ஒன்றிடமிருந்து இழப்பீட்டுப் பணத்தை அறவிடுவது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தாமதமடைந்துள்ளமை குறித்தும் இக்குழுவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CM விஜய்யை தொடர்ந்து திருமாவை சந்தித்த கஜேந்திரகுமார்

CM விஜய்யை தொடர்ந்து திருமாவை சந்தித்த கஜேந்திரகுமார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026