மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்: இளைஞர் உயிரிழப்பு
களுத்துறை, மொல்லிகொட, வாதுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இன்று (28) காலை 8.00 மணியளவில் மொல்லிகொட சந்திப்பிலிருந்து கந்தேகடே நோக்கிச் செல்லும் பிரதான வீதியிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
வஸ்கடுவ பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞரே விபத்தில் உயிரிழந்தவர் ஆவார்.
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்
தனது அலுவலக நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. இருவரும் தனித்தனி மோட்டார்சைக்கிளேயே பயணித்துள்ளனர்.

உயிரிழந்தவர் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தியதையடுத்து, கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியோரத்தில் இருந்த மின்கம்பவத்தில் மோதியுள்ளது.
இந்நிலையில் பின்னால் வந்துகொண்டிருந்த அவரது நண்பரின் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்துள்ளார். காயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் வாதுவ காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |