கஞ்சா வளர்த்த காவல்துறை உத்தியோகத்தர் சிக்கினார்
மொனராகலை காவல்துறை அத்தியட்சகர் சிசிர குமார காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் (STF) 600 க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளுடன் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை அதிகாரியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது உலோக ஸ்கானர் ஒன்றையும் மீட்டுள்ளதாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
கஞ்சா செடிகள் மற்றும் காவல்துறை அதிகாரி
கஞ்சா செடிகள் மற்றும் காவல்துறை அதிகாரி ஆகியோர் மேலதிக விசாரணைக்காக மொனராகலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
காவல் துறை அதிகாரயின் சாரதியான காவல்துறை உத்தியோகத்தர் உட்பட நான்கு பேரும் கைது செய்யப்பட்டதுடன் ஒரு ஜீப்பும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஊவா மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் பொறுப்பேற்றுள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
மேலதிக விசாரணைகளுக்காக விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் குழுவொன்று மொனராகலை பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறைஅத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
