சிறிலங்காவில் தேர்தலை நடத்த காசு அனுப்பியுள்ள யாழ் இளைஞன்
Election Commission of Sri Lanka
Jaffna
Ranil Wickremesinghe
Sri Lankan local elections 2023
By Vanan
தேர்தலை நடத்த நிதியில்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் கூறியுள்ள நிலையில் , தேர்தலை நடத்த தன்னால் முடிந்த நிதியுதவியை வழங்கியுள்ளார் யாழ்ப்பாணத்து இளைஞன்.
யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியைச் சேர்ந்த இம்மானுவேல் தயாளன் எனும் இளைஞனே இவ்வாறு பணத்தினை அனுப்பியுள்ளார்.
காசுக் கட்டளை
இம்மானுவேல் தயாளன் காசுக் கட்டளை மூலம் 500 ரூபாய் பணத்தினை தேர்தல் ஆணையகத்திற்கு அனுப்பியுள்ளார்.
"தேர்தலை நடாத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டுவோம், சிறு துளி பெருவெள்ளம்" என தபாலகம் ஊடாக 500 ரூபாய் காசுக் கட்டளையை தேர்தல் ஆணையகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.



2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி