யோஷித மீதான பணமோசடி வழக்கு! சாட்சிய விசாரணை தொடர்பில் நீதிமன்றி உத்தரவு
சட்டவிரோத சொத்துக்களை கையகப்படுத்தியது தொடர்பாக பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ச மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சாட்சிய விசாரணையின் மேலதிக விசாரணையை கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
வழக்கானது இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் நீதிமன்றினால் மேற்படி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி வழக்கானது டிசம்பர் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
73 மில்லியன் ரூபாய் பரிவர்த்தனை
கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்கவின் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இவ்வழக்கின் சாட்சிய விசாரணை இன்று பிற்பகல் தொடங்கியது. இதன்போது சாட்சி என் 85 ஆல் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், சாட்சிய எண்களான 9, 38 மற்றும் 85 ஆகியோர் அடுத்த திட்டமிடப்பட்ட திகதியில் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதன்படி பிரதிவாதியான யோஷித ராஜபக்ச, திறந்த நீதிமன்றத்தில் முன்னிலையாகிய நிலையில், தெஹிவளை மற்றும் ரத்மலானை பகுதிகளில் 730 இலட்சம் ரூபாய்க்கு (73 மில்லியன் ரூபாய்) அதிகமான செலவில் ஐந்து நிலங்களை வாங்கியதன் மூலம் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்ததாகக் குற்றம் சாட்டி, சட்டமா அதிபர் யோஷித ராஜபக்ச மீது இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |