மகிந்தவின் மகன் யோஷிதவிற்கு எதிரான வழக்கு : நீதிமன்றின் உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி போரஸ்ட் ஆகியோருக்கு எதிரான வழக்கு ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த வழக்கை ஜூலை மாதம் 16 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (10) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதிகளான யோஷித ராஜபக்ச மற்றும் டெய்சி போரஸ்ட் ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
சட்டமா அதிபர் திணைக்களம்
மேலும் இதன்போது சட்டமா அதிபர் திணைக்களம், அது தொடர்பான சட்ட முன்னேற்றங்கள் குறித்து நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.

அரச தரப்பு சார்பில் முன்னிலையான சிரேஷ்ட அரச சட்ட ஆலோசகர் ஓஸ்வால்ட் பெரேரா, இதே விடயம் தொடர்பான ஒரு இணை வழக்கு தற்போது 8 ஆம் இலக்க உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அந்த வழக்கில் முதல் குற்றவாளி, குற்றச்சாட்டுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் விளக்கினார்.
இந்த நிலையில் தொடர்புடைய வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை, இந்த வழக்கிற்கு ஒரு புதிய திகதியை நிர்ணயிக்குமாறு அரச தரப்பு கோரியதையடுத்து அடுத்த விசாரணைக்கு ஜூலை 16 ஆம் திகதியை நிர்ணயித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மண்டைதீவு படுகொலை … கடலால் சூழப்பட்ட ஒரு தீவின் இரத்த நினைவுகள்... 5 மணி நேரம் முன்