தென்னாபிரிக்காவில் பணமோசடி - காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு விதிக்கப்பட்டது சிறை
prison
court
gandhi
southafrica
nephew
By Sumithiran
மகாத்மா காந்தியின் பேத்தியும், தென்னாபிரிக்காவில் எம்பியாக இருந்தவருமான இலா காந்தியின் மகள் ஆஷிஷ் லதா ராம்கோபினுக்கு பண மோசடி வழக்கில் தென்னாபிரிக்க நீதிமன்றம் 7 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி உள்ளது.
56 வயதான இவர், இந்தியாவில் இருந்து, சரக்குகளை, சுங்கவரி இல்லாமல் இறக்குமதி செய்து தருவதாக, மகராஜ் என்ற தொழிலதிபரிடம் இருந்து இந்திய மதிப்பில் சுமார் 3 கோடியே 33 லட்சம் ரூபாய் பெற்று ஏமாற்றினார் என, டர்பன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த 2015 ல் தொடரப்பட்ட இந்த வழக்கில் அவருக்கு பின்னர் ஜாமின் வழங்கப்பட்டாலும், இப்போது தீர்ப்பு வெளியாகி, மேல்முறையீடு செய்ய முடியாது என்ற நிபந்தனையுடன் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்