முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நிரந்தர ஊதியம் - தயாராகிறது அமைச்சரவைப் பத்திரம்
srilanka
money
namal rajapaksa
By Vasanth
முன்பள்ளியில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நிரந்தர சம்பளம் ஒன்றினை வழங்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஒன்று கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அது விரைவில் அமைச்சரவையில் சமர்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கிராமிய பொருளாதார மேம்பாட்டு தேசிய வேலைத்திட்டதின் சமூக அபிவிருத்தி உட்கட்டமைப்பு தொடர்பான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி