நாளை முதல் முடக்க நிவாரணக் கொடுப்பனவு!
covid
people
money
By Vanan
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முடக்கப்பட்டுள்ளதால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளது.
அதன்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 2000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாளை திங்கட்கிழமை முதல் இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கொரோனா தொற்றுக் காரணமாக நாடு எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் முடக்கப்பட்டுள்ள நிலையில் இந்தக் கொடுப்பனவு பற்றிய தகவலை நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த முடக்க நிலைகளின் போது இருமுறை 5000.00 ரூபா வழங்கப்பட்டிருந்த போதிலும் இம்முறை 2000.00 ரூபா மாத்திரமே வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி