இரண்டாவது குரங்கம்மை நோயாளி கண்டுபிடிப்பு - பதற்றத்தில் மக்கள்
Sri Lanka
Virus
Monkeypox virus
By pavan
நோயாளி
இலங்கையில் இரண்டாவது குரங்கம்மை நோயாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது.
டுபாயிலிருந்து அண்மையில் நாடுதிரும்பிய குறித்த நபர், தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னரே இலங்கையின் முதலாவது குரங்கம்மை நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மக்களுக்கு அறிவித்தல்
இந்நிலையில், தற்போது இரண்டாவது நோயாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படத்தியள்ளது
எவ்வாறாயினும் மக்கள் குரங்கம்மை நோய் தொடர்பாக அச்சமடைய தேவையில்லை என சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்