வியட்நாமில் வேகமாகப் பரவும் குரங்கம்மை நோய்: 6 பேர் உயிரிழப்பு
தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் குரங்கம்மை நோய் வேகமாக பரவுகின்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வியட்நாமின் தென் மாகாணமான லாங் ஆன்னில் நோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த பகுதியில் இதுவரை 117 பேர் குரங்கம்மை பாதிப்புக்குள்ளாகி உள்ளனர் எனக் குறிப்பிடப்படுகின்றது.
6 பேர் உயிரிழப்பு
இதேவேளை குரங்கம்மை நோய்த் தொற்று காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

நவம்பர் மாதம் முதல் தொற்றுநோய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஹோ சி மின் நகரத்தின் வெப்பமண்டல நோய்களுக்கான மருத்துவமனையைச் சேர்ந்த டொக்டர் ஹுய்ன் தி துய் ஹோ தெரிவிக்கையில்
49 நோயாளர்கள் அனுமதி
”கடந்த மூன்று மாதங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 49 நோயாளர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

40 பேர் குணமடைந்ததுடன், மூன்று பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் ” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
2 நாட்கள் முன்