இலங்கையிலிருந்து பலஸ்தீனத்திற்கு அனுப்பப்படவுள்ள தேயிலை
இலங்கையிலிருந்து பலஸ்தீனத்திற்கு ஆயிரம் கிலோ கிராம் தேயிலை அனுப்பப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த தேயிலை இலங்கையிலிருந்து சவூதி அரேபியா ஊடாக பலஸ்தீனர்களுக்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தேயிலை சபையினால் சேகரிக்கப்படும் இந்த நன்கொடை, விரைவில் சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கு சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் கொண்டு செல்லப்படவுள்ளது.
சவூதி அரேபிய அரசாங்கம்
காசா மற்றும் மேற்குக் கரையில் உள்ள போரினால் பாதிக்கப்பட்ட பலஸ்தீனர்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சவூதி அரேபிய அரசாங்கம் பலஸ்தீனர்களுக்காக நிதி சேகரித்து உணவு உள்ளிட்ட நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
இந்தநிலையில், காசாவின் எல்லையில் உள்ள எகிப்துக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அவை விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |