கடற்படையினரால் நுரைச்சோலையில் பெருமளவு பீடி இலைகள் மீட்பு (படங்கள்)!
புத்தளம் நுரைச்சோலைப் பகுதியில் பெருந்தொகையான பீடி இலைகளை சிறிலங்கா கடற்படையினர் மீட்டுள்ளனர்.
நேற்றைய தினம் (23) கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே பெருமளவு பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
தேடுதல் நடவடிக்கை
நாட்டில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக சிறிலங்கா கடற்படையினரால் அடிக்கடி தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவ்வாறு, சிறிலங்காவின் வடமேற்கு கடற்படைக் கட்டளைப் பகுதியின் தளபதியான தம்பபன்னியின் மூலம் நுரைச்சோலை பகுதியில் நேற்றைய தினம் (23) தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையின் போது, சந்தேகத்திற்கிடமான வகையில் நுரைச்சோலை பொருளாதார நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றை கடற்படையினர் சோதனையிட்டனர்.
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக
இதன்போது குறித்த வாகனத்தில் சுமார் 1955 கிலோ எடையுள்ள 63 பீடி இலைகள் பொதிகளாகக் காணப்பட்டன.
இதனால் அங்கிருந்த பீடி இலைகள் மற்றும் லொறி என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
மேலும், பீடி இலைகள் மற்றும் லொறி ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |