பிரான்ஸில் பலஸ்தீனத்திற்கு ஆதரவு பேரணி : வெடித்தது வன்முறை

France Israel Palestine Israel-Hamas War
By Sathangani Oct 14, 2023 05:36 AM GMT
Report

பிரான்ஸில் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக நேற்று முன்தினம் (12)  இடம்பெற்ற பேரணியில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில்  வன்முறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் போராட்டக்காரர்கள் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதுடன் பலர் கைது செய்யப்பட்டடு பாரீஸ் உள்ளிட்ட நகரங்கள் போர்க்களம் போல மாறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்ற நிலையில் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களினால் காசா நகரம் உருக்குலைந்து வருகிறது.

ஹமாஸால் பிணைக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்ட இஸ்ரேலியர்கள் பிணமாக மீட்பு

ஹமாஸால் பிணைக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்ட இஸ்ரேலியர்கள் பிணமாக மீட்பு

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர்

இதேவேளை ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது சரமாரியாக வான்வழிக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன்  இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்புக்கள் அதிகரித்துக் கொண்டே செல்லுகின்றது.

பிரான்ஸில் பலஸ்தீனத்திற்கு ஆதரவு பேரணி : வெடித்தது வன்முறை | Pro Palestine Rally In France Violence Erupted

இந்த நிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பல நாடுகள் இஸ்ரேலுக்கு வெளிப்படையான ஆதரவை தெரிவித்துள்ளதுடன் உலகின் பல நாடுகளில் இருக்கும் பலஸ்தீன மற்றும் ஹமாஸ் ஆதரவாளர்கள் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இஸ்ரேல் - ஹமாஸ் போரினால் யூத விரோதம் அதிகரிக்கும் என்ற அச்சத்தினால் பல ஐரோப்பிய நாடுகள் பலஸ்தீன ஆதரவு பேரணிகளுக்கு தடை விதித்துள்ளன.

பாலஸ்தீன மக்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் மனிதாபிமான உதவி

பாலஸ்தீன மக்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் மனிதாபிமான உதவி

பிரான்சில் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக பேரணி

இதேவேளை பிரான்ஸிலும் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் பலஸ்தீனத்திற்கு ஆதரவு பேரணி : வெடித்தது வன்முறை | Pro Palestine Rally In France Violence Erupted

பிரான்ஸ் அரசாங்கம் விதித்துள்ள தடையை மீறி நேற்று முன்தினம் இரவு தலைநகர் பாரீசில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு பலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் என்பவற்றை நடத்தினர்.

பேரணிகளை நிறுத்திய காவல்துறையினர் மக்களை கலைந்து செல்லும்படி எச்சரித்துள்ள நிலையில் இதனை மறுத்த போராட்டக்காரர்கள் காவல்துறையினர்  வைத்திருந்த தடுப்புகளை மீறிச் செல்ல முயன்றுள்ளனர்.

ஹமாஸை முற்றிலுமாக அழிக்கும் நகர்வு! இஸ்ரேலுக்கு புடின் எச்சரிக்கை

ஹமாஸை முற்றிலுமாக அழிக்கும் நகர்வு! இஸ்ரேலுக்கு புடின் எச்சரிக்கை

பிரான்ஸ் அதிபர்  வேண்டுகோள்

இதனால் காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் பினனர்  வன்முறையாக  மாறியுள்ளது.

பிரான்ஸில் பலஸ்தீனத்திற்கு ஆதரவு பேரணி : வெடித்தது வன்முறை | Pro Palestine Rally In France Violence Erupted

அதனைத் தொடர்ந்து காவல்துறையினர்  கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை அடித்தும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.

இதனிடையே பேரணிகளுக்கு பிரான்ஸ் அரசு விதித்துள்ள தடையானது கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்றும், பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் எனவும் பலஸ்தீன ஆதரவு குழுக்கள் தெரிவித்துள்ளன. 

இந்த நிலையில் போராட்டம் குறித்து கருத்து வெளியிட்ட  பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் உள்நாட்டில் பிளவை ஏற்படுத்த வேண்டாம் என மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி