ஜீவன் தொண்டமானைப் பாராட்டிய அவுஸ்ரேலிய தூதுவர்
சுத்தமான குடிநீரை வழங்குவதற்காக நீர்வழங்கல் துறையில் அமைச்சர் ஜீவன் தொண்டமானால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையை இலங்கைக்கான அவுஸ்ரேலிய தூதுவர் Paul Stephens பாராட்டியுள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும், இலங்கைக்கான அவுஸ்ரேலிய தூதுவருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.
அவுஸ்ரேலியாவின் உதவி
அத்துடன், நீர்வழங்கல் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு அமைச்சரால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது நீர்வழங்கல் துறையில் இடம்பெற்றுவரும் மறுசீரமைப்புகள் குறித்து தூதுவருக்கு அமைச்சர் விளக்கமளித்தார்.
இதேவேளை அதற்கு அவுஸ்ரேலியாவின் உதவியும், அனுபவ பகிர்வும் அவசியம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஜீவன் தொண்டமான் கோரிக்கை
அதேபோன்று மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும், அதற்கு அவுஸ்ரேலியாவும் பங்களிப்பு செய்ய வேண்டும் எனவும் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியின் கீழ் இலங்கையில் நீர் வழங்கல் துறையின் புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |