ஞானசார தேரருக்கு எதிராக திரளும் பிக்குகள் - பௌத்த துறவிகளின் காவி உடையில் இனவாதச் சதிவலை

Anura Kumara Dissanayaka SL Protest Buddhism National People's Power - NPP NPP Government
By Independent Writer Oct 16, 2026 07:08 AM GMT
Report

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஆதரவாக அண்மைக் காலமாகச் சில பிக்குகள் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக மற்றொரு தரப்பு பிக்குகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து கருத்துத் தெரிவித்த அவர்கள், இந்த நடவடிக்கைகள் தோல்வியடைந்த அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகவே முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

மெதிரிகிரிய அசோகராம பிரிவேனாவின் விரிவுரையாளரான கல்கமுவே நந்தாலோக தேரர் இதன்போது கருத்துத் தெரிவிக்கையில், ஞானசார தேரரை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, தோல்வியடைந்த அரசியல் தரப்பினர் தங்களின் அரசியல் வெறியை மறைக்க முயற்சிப்பதாகக் குறிப்பிட்டார்.

ஞானசாரர் ஆதரவு போராட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடை : நீதிமன்ற அறிக்கையை கசக்கி எறிந்த போராட்டக்காரர்கள்

ஞானசாரர் ஆதரவு போராட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடை : நீதிமன்ற அறிக்கையை கசக்கி எறிந்த போராட்டக்காரர்கள்

பௌத்த துறவிகளின் காவி உடை

இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாக இருப்பதுடன், பௌத்த சாசனத்தையும் மேலும் இழிவுபடுத்துவதாக அவர் தெரிவித்தார். தமக்குக் கிடைத்து வந்த வருமானத்தை இழந்த சிலர் பணத்தைச் செலவிட்டு, இவ்வாறு பௌத்த துறவிகளின் காவி உடையைப் பயன்படுத்தி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

ஞானசார தேரருக்கு எதிராக திரளும் பிக்குகள் - பௌத்த துறவிகளின் காவி உடையில் இனவாதச் சதிவலை | Monks Gather Against Venerable Gnanasara Thero

இந்நிலை தொடருமானால், எதிர்காலத்தில் பேசுவதற்குக்கூட ஒரு பிக்குவும் இல்லாத சூழல் உருவாகக்கூடும் எனவும் நந்தாலோக தேரர் எச்சரித்தார்.

சட்டபூர்வமான தண்டனைக் காலம் நிறைவடைந்த பின்னர் ஞானசார தேரர் விடுதலையாகி வருவார் என்றும், தோல்வியடைந்த அரசியல்வாதிகளால் வழிநடத்தப்படும் இந்தச் சூழ்ச்சித் திட்டத்தை உடனடியாகத் தோற்கடிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிலைமை தேசிய ஒற்றுமைக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும் எனக் குறிப்பிட்ட பொலன்னறுவை மாவட்ட தேசிய பிக்குகள் முன்னணியின் உல்பத்தேலாகம சுமங்கல தேரர், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாகத் தங்களுக்கு இழந்த வாய்ப்புகளை மீண்டும் பெற்றுக்கொள்ள மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இந்தப் புதிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஞானசாரர் ஆதரவு போராட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடை : நீதிமன்ற அறிக்கையை கசக்கி எறிந்த போராட்டக்காரர்கள்

ஞானசாரர் ஆதரவு போராட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடை : நீதிமன்ற அறிக்கையை கசக்கி எறிந்த போராட்டக்காரர்கள்

இனவாதச் சதிவலை

பௌத்த கொடியைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் இந்த இனவாதச் சதிவலையில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்றும், அதன் உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் ஒட்டுமொத்த பௌத்த மகா சங்கத்தினரிடமும் பொதுமக்களிடமும் கோரிக்கை விடுத்தார்.

ஞானசார தேரருக்கு எதிராக திரளும் பிக்குகள் - பௌத்த துறவிகளின் காவி உடையில் இனவாதச் சதிவலை | Monks Gather Against Venerable Gnanasara Thero

இதற்கிடையில், தற்போதைய சட்டக் கட்டமைப்பு மற்றும் ஜனாதிபதியின் தலையீடு தொடர்பில் கருத்துத் தெரிவித்த பொலன்னறுவை மாவட்ட தேசிய பிக்குகள் முன்னணியின் தலைவர் பேருப்பல்லே சுகதசோம தேரர், கடந்த காலங்களில் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராகப் பொதுமக்கள் குரல் எழுப்பி வந்ததாகக் குறிப்பிட்டார்.

அதற்கமைய, ஜனாதிபதி சட்டபூர்வமாக நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான பின்னணியை உருவாக்கியுள்ளதால், தேவையற்ற தீர்வுகளைத் தேடிச் செல்லாமல் பொறுமையுடன் செயற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மேலும், மகா சங்கத்தின் ஒவ்வொரு பீடத்தையும் சேர்ந்த பதிவாளர் தேரர்களை அழைத்து, இந்தப் பிரச்சினையை ஆரம்பத்திலேயே பொருத்தமான முறையில் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளதாகவும் சுகதசோம தேரர் இதன்போது நினைவூட்டினார்.

காவல்துறை பேருந்நு வந்தவுடன் கலைந்து சென்ற போராட்டக்காரர்கள்! முடிவுக்கு வருகிறது ஞானசார ஆதரவு போராட்டம்

காவல்துறை பேருந்நு வந்தவுடன் கலைந்து சென்ற போராட்டக்காரர்கள்! முடிவுக்கு வருகிறது ஞானசார ஆதரவு போராட்டம்

You may like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016