இனவாதத்தை கக்கும் தேரர்களை நோக்கியும் சட்டம் பாய வேண்டும் - மனோ கோரிக்கை
இன, மத வெறுப்பை கக்கி வரும் பெளத்த தேரர்களை நோக்கியும் சட்டம் இனி பாய வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு மதத் தலைவரும், செயற்பாட்டாளரும், தமது இனவாத, மதவாத நடவடிக்கைள் தொடர்பில் இனிமேல் சட்டத்தின் முன் விலக்கு பெறக் கூடாது என ஐ.பி.சி தமிழுக்கு வழங்கிய செவ்வியில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனோ கணேசனின் ஆதங்கம்
போதகர் ஜெரோம் பெர்ணாண்டோ மற்றும் சமூக செயற்பாட்டாளர் நடாஷா எதிரிசூரிய ஆகியோர் பௌத்த மார்க்கம் உட்பட ஏனைய மத நம்பிக்கைகளை அவமதித்தார்கள் எனக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை பேசுபொருளாகியுள்ளது.
இந்த நிலையில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாரதிபதி அம்பிட்டியே சுமன ரத்ன தேரர் ஆகியோரின் நிழற்படங்களை பகிர்ந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மனோ கணேசன், இனவாதத்தை கக்கும் தேரர்களும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
தேரர் விளக்கமறியலில்
இவரது பதிவு இப்படியிருக்க, இனங்களுக்கு இடையில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாகக் கைது செய்யப்பட்ட ராஜாங்கனை சத்தாரதன தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட தேரரை இன்றைய தினம் (29) கொழும்பு - கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
If Pastor #JeromeF & now Speaker #NathashaE are breaking the law with their speech then the same law should be applied to monks who have spouted hate speech against fellow religions. The law can't be ONE-SIDED anymore! @RW_UNP @sajithpremadasa @anuradisanayake pic.twitter.com/Ect6trYA7j
— Mano Ganesan (@ManoGanesan) May 29, 2023
YOU MAY LIKE THIS
