கொழும்பை சுற்றி வலம் வரும் ஞானசார தேரரின் விடுதலைக்கான பேரணி!
புதிய இணைப்பு
ஞானசார தேரருக்கான விடுதலை கோரி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னாள் போராட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் தனது பேரணி பயணத்தை பம்பலபிட்டியவை நோக்கி ஆரம்பித்துள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரருக்கான விடுதலை கோரி போராட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு பேரணியை ஆரம்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது புத்த சாசன அமைச்சை நோக்கி செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றையதினம் குறித்த போராட்டத்துக்கு எதிராக கோட்டை நீதவான் பிறப்பித்த தடை உத்தரவுக்கு அமைய போராட்டத்தை கைவிட்ட அவர்கள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிக்குகள், தற்போது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்குச் செல்லப்போவதாக தெரிவிக்கப்படுகிறது.

போராட்டம் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மற்றும் அங்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து, பிக்குகள் நீதிமன்றம் நோக்கிப் புறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் மற்றும் பிக்குகள் கொண்டு வந்திருந்த பொருட்களை அகற்றும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


காவல்துறை பேருந்து வந்தவுடன் கலைந்து சென்ற போராட்டக்காரர்கள்! முடிவுக்கு வருகிறது ஞானசார ஆதரவு போராட்டம்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |