புதைந்த கிராமங்கள் - ஒரு மாத சம்பளத்தை வீடு கட்ட கொடுக்கும் சாணக்கியன் எம்.பி
வீடுகளை இழந்த மக்களுக்கு உதவிகளை வழங்கும் நோக்குடன், தனது சம்பளத்தை நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாட்டைத் தாக்கிய சூறாவளியால் ஏற்பட்ட பாரிய அனர்த்த நிலை காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் நேற்று (03.12.2025) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
திறைசேரி நிதி
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நாட்டை மீள கட்டியெழுக்க திறைசேரி நிதி மட்டும் போதாது என ஜனாதிபதி கூறினார்.

அதனால் எனது அடுத்த மாத வேதனத்தை வீடமைப்பு பணிகளுக்காக வழங்க தயாராக உள்ளேன்
இதனிடையே, தேசிய மக்கள் மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 159 பேரினது வேதனங்களும், கட்சி நிதியத்தையே சென்றடைகிறது என நினைக்கிறேன்.
வீடமைப்பு பணிகளுக்காக ஒதுக்க வேண்டும்
எமது மதிப்பீட்டின் படி, கடந்த வருடம் முதல் தற்போது வரையான காலப்பகுதியில் அவர்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களது வேதனம் உள்ளடங்களாக ஒரு பில்லியன் ரூபாய் நிதி மக்கள் விடுதலை முன்னணி நிதியத்தை சென்றடைந்துள்ளது.

எனவே, திறைசேரி நிதி மாத்திரம் நாட்டை கட்டியெழுப்ப போதாது என ஜனாதிபதி கூறும் நிலையில், மக்கள் விடுதலை முன்னணியின் நிதியத்தில் உள்ள நிதியையும் வீடமைப்பு பணிகளுக்காக ஒதுக்க வேண்டும் என தாம் கோரிக்கை விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |