45க்கும் குறைவான கொரோனா மரணங்கள்
corona
sri lanka
death
By Shalini
நாட்டில் நேற்றைய தினம் (05) கொரோனா தொற்றால் 43 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 13,185 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று உயிரிழந்தவர்களில் 20 பெண்களும் 23 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.