ஊரடங்கு தொடர்பில் ஜனாதிபதியின் எச்சரிக்கையை மீறிய 452 பேர் கைது
arrest
police
sri lanka
By Shalini
கடந்த 24 மணித்தியாலங்களுள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 452 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த காலப்பகுதியிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
ஊரடங்கை மீறுவோரை கைது செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ள போதும், ஒரே நாளில் 452 பேர் ஊரடங்கு சட்டத்தை மீறியுள்ளனர்.
அதற்கமைய, கடந்த ஒக்டோபர் முதல் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைதானவர்களின் மொத்த எண்ணிக்கை 56, 294 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, மேல் மாகாணத்துக்கு பிரவேசிக்கும், அங்கிருந்து வெளியேறும் 13 இடங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் 639 வாகனங்களும், 1, 128 நபர்களும் நேற்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி