2023 இலும் இலங்கைப் பொருளாதாரம் வீழ்ச்சி காணும் - ஆசிய அபிவிருத்தி வங்கி!
Sri Lanka Economic Crisis
Government Of Sri Lanka
Asian Development Bank
Economy of Sri Lanka
By Pakirathan
2022 ம் ஆண்டு பாரிய வீழ்ச்சி கண்ட இலங்கையின் பொருளாதாரம், தற்போது சற்று மீள ஆரம்பித்துள்ளது.
இந்தநிலையில், 2023 ம் ஆண்டும் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து மீண்டும் 2024 இல் வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் என ஆசிய அபிவிருத்தி வங்கி கூறியுள்ளது.
ஏழு வீதமாக 2022 இல் வீழ்ச்சி கண்டிருந்த இலங்கைப் பொருளாதாரம், 2023 இல் மூன்று வீதமாக வீழ்ச்சி காணும் என ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்வு கூறியுள்ளது.
பொருளாதார வளர்ச்சி
வீழ்ச்சி கண்டுள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நீண்டபாதையில் பயணிக்கவேண்டும்.
முக்கியமாக வறியவர்களும் நலிந்தவர்களும் அவசியம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பிரதி இயக்குநர் உட்சவ் குமார் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி