மேலும் இரண்டு இராஜாங்க அமைச்சுக்களில் திருத்தம்
இரண்டு இராஜாங்க அமைச்சுக்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அதற்கமைய, சேதனப் பசளை உற்பத்தி, ஊக்குவிப்பு மற்றும் விநியோக ஒழுங்குபடுத்தல், நெல் மற்றும் தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழ வகைகள், மிளகாய், வெங்காயம் , உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சராக சஷிந்திர ராஜபக்ஸ பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
மேலும், கரையோர பாதுகாப்பு, தாழ்நில அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக மொஹான் டி சில்வா பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் முன்னிலையில் இரண்டு இராஜாங்க அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இதேவேளை இன்றைய தினம் பசில் ராஜபக்ஸ புதிய அமைச்சராக பதவியேற்றதுடன், மஹிந்தவின் பதவியிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

