உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கு கூடுதல் அதிகாரம்: வலியுறுத்தும் தமிழ் எம்.பி
இட ஒதுக்கீடுகளை வழங்கி தேர்தலை நடத்தினால் மட்டும் போதாது, உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கு கூடுதல் அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச. குகதாசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டாவறு குறிபிட்டுள்ளார்.
அதிகாரங்கள்
தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், எமது அண்டைய நாடான இந்தியாவிலே கூடுதலான அதிகாரங்கள் வழங்கப் பட்டுள்ளன.
அவர்கள் உயர்நிலை கல்வி நிறுவனங்களைக் கூட நடத்தி வருகின்றனர், டொரன்டோ மேயர் காவல் துறை ஆணையாளரை நியமிக்கும் அதிகாரம் கொண்டவராகக் காணப் படுகிறார்.
இந்த அதிகாரங்களை நமது உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கு வழங்கினால் தாம் பெண்களை இளையோரை வலுப்படுத்துவோம் என்னும் சொல்லுக்கு ஒரு பொருள் இருக்க முடியும். மேலும் இந்த உள்ளூர் அதிகார சபைகளுக்கு போதுமான வசதிகள் இல்லை.
உள்ளூராட்சித் தேர்தல்
எடுத்துக் காட்டாக திருகோணமலை நகர சபைக்கு குப்பைகளை அகற்றுவதற்கு மிகக் குறைந்த வாகனங்கள் தான் காணப் படுகின்றது. இதனால் ஒழுங்காக குப்பைகளை அகற்றுவதற்கு இயலாமல் உள்ளது. இந்தச் சிக்கலை தீர்ப்பதற்கு கூடுதலான வாகன வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.
இறுதியாக உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப் பட வேண்டும். இளையோர் பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
சபைகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப் பட வேண்டும். அவற்றுக்கு வசதி வாய்ப்புகள் அளிக்கப் பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
