ஐரோப்பிய நாடொன்றில் இருளில் மூழ்கிய 1000 நகரங்கள்

Russo-Ukrainian War Ukraine Europe Weather
By Beulah Jan 10, 2024 01:13 AM GMT
Report

உக்ரைனில், பனிப்பொழிவு, பலத்த காற்று உள்ளிட்ட காரணங்களால் 1,025 குடியிருப்பு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

மேலும், உடனடி நடவடிக்கை எடுக்கவும் முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கடும் பனிப்பொழிவு காரணமாக உக்ரைனின் 9 பிராந்தியங்களில் சுமார் 1000 நகரங்கள் மற்றும் கிராமங்கள் மின்சாரமின்றி இருளில் மூழ்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனேடிய மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : குறைவடையும் வீடுகளின் விலைகள்

கனேடிய மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : குறைவடையும் வீடுகளின் விலைகள்

மின்சக்தி அமைப்பு

மட்டுமின்றி, ரஷ்ய தாக்குதல்களால் மின்சக்தி அமைப்பு பலவீனமடைந்துள்ளதாகவும், இதனால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தவும் குடியிருப்பாளர்களை வலியுறுத்தியுள்ளனர்.

ஐரோப்பிய நாடொன்றில் இருளில் மூழ்கிய 1000 நகரங்கள் | More Than 1 000 Ukrainian Towns Lose Power

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை சுமார் -15 டிகிரி செல்சியஸ் வரை குறைந்துள்ளதால், இந்த வாரத்தில் மின்சார நுகர்வு மிக அதிகமாக இருந்தது என்றும் கூறப்படுகிறது.

மேலும், காலையில் மின்சார நுகர்வு ஏற்கனவே முந்தைய நாளை விட 5.8 சதவிகிதம் அதிகமாக இருந்ததாகவும் கூறுகின்றனர்.

மக்கள் ஒரே நேரத்தில் பல மின் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மின்சார இறக்குமதி

நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய உக்ரைன் அண்டை நாடுகளான ருமேனியா மற்றும் ஸ்லோவாக்கியாவிலிருந்து மின்சாரத்தை இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது.

ஐரோப்பிய நாடொன்றில் இருளில் மூழ்கிய 1000 நகரங்கள் | More Than 1 000 Ukrainian Towns Lose Power

மேலும், உக்ரேனிய அனல் மின் நிலையங்கள் கடந்த குளிர்காலத்தின் போது பாரிய ரஷ்ய தாக்குதல்களிலிருந்து இன்னும் மீண்டு வருவதாகவும், மோசமான வானிலை காரணமாக சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் முழு திறனுடன் செயல்பட முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

கடந்த குளிர்காலத்தில் ரஷ்யா உக்ரேனிய மின் அமைப்பை ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களால் தாக்கியது, இதனால் மில்லியன் கணக்கான மக்கள் அடிக்கடி இருளில் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

கடந்த வருடம் கடல் மார்க்கமாக இடம்பெயர முயன்ற 6,000-க்கும் அதிகமான பேர் உயிரிழப்பு

கடந்த வருடம் கடல் மார்க்கமாக இடம்பெயர முயன்ற 6,000-க்கும் அதிகமான பேர் உயிரிழப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026