அடுத்த இரண்டு நாட்களுக்கு 3 மணிநேரத்துக்கும் அதிகமான மின்வெட்டு!
power cut
electricity board
fuel shortage
electricity crisis
srilankan economic crisis
puscl
By Kanna
அடுத்த இரண்டு நாட்களுக்கு சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, நாளை மற்றும் நாளை மறுதினம் நாடு முழுவதும் சுழற்சி முறையில் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அனைத்து வலையங்களுக்கும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதிக்குள் 2 மணித்தியாலங்களும்,
மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதிக்குள் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி