முந்நூறுக்கும் மேற்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் கைது!
இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 300 க்கும் மேற்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படை ஊடகப் பேச்சாளர் இந்திக டி சில்வா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, இலங்கை கடல் எல்லையைத் தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 314 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட 40 படகுகள்
அத்துடன், அவர்கள் பயணித்த 40 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

முன்னதாக நேற்று (03.11.2025) அதிகாலை மாத்திரம் நான்கு படகுகளில் வருகை தந்த 35 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், இலங்கை கடற்றொழிலாளர்களை பாதுகாக்கும் முகமாக, எல்லை தாண்டிய கடற்றொழிலில் ஈடுபடும் எந்தவொரு இந்திய கடற்றொழிலாளரும் பாரபட்சமின்றி கைது செய்யப்படுவார்கள் என்வும் அவர் கூறினார்.
எனினும், இவை சட்டத்துக்கு உட்பட்ட வகையிலேயே முன்னெடுக்கப்படுவதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் இந்திக டி சில்வா தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |