இலங்கையில் 40 ஆயிரம் போலி மருத்துவர்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்
நாடு முழுவதும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆபத்தான நிலையில் உள்ள நோயாளர்களுக்கு போலி வைத்தியர்கள் சிகிச்சை அளிப்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
சில சந்தர்ப்பங்களில் மருத்துவ உதவியாளர்கள், தாதியர்கள் அல்லது துணை மருத்துவ சேவைகளில் அங்கம் வகிக்கும் ஒருவர், மருத்துவர்களாக தம்மைக் காட்டிக் கொண்டு அவர்களின் கிராமத்திலோ அல்லது சொந்த ஊரிலோ நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது கண்டறியப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
பரிந்துரைக்கப்பட்ட மருந்து
இதேவேளை, இலங்கையின் சுகாதார அமைப்பிற்குள், ஒரு நோயாளிக்கு மருந்துகளை பரிந்துரைக்கும் அறிவும், பொறுப்பும் மற்றும் அதிகாரமும் ஒரு மருத்துவருக்கு மட்டுமே உண்டு என்று அவர் சுட்டிக்காட்டினார்.
வேறு எந்த குழுவிற்கும் அவ்வாறு செய்வதற்கான அறிவு அல்லது அதிகாரம் இல்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
எனவே ஒரு நோயாளி மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மட்டுமே பெற முடியும் அல்லது ஆய்வக சோதனைக்கு உட்படுத்த முடியும் என சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |