தீவிரமடையும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் : 500 ஐ கடந்த இஸ்ரேல் இராணுவத்தின் இழப்பு
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்துக்கு டையிலான போர் ஆரம்பித்ததிலிருந்து, இதுவரை சுமார் 500 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
அத்துடன், சுமார் 900 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தரைவழித் தாக்குதல்களின் போது இஸ்ரேல் பாதுகாப்பு படையின் மேலும் 160 கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் போர்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்துக்கிடையிலான போர் தற்போது இரண்டு மாதங்களுக்கும் அதிகமாக நீடித்து வருகிறது.
இந்த போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் பின்னணியில், ஹமாஸ் இயக்கத்தை அழிக்கும் வரை போரை நிறுத்தப் போவதில்லை என இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இதற்கமைய, தற்போது காசா மீதான வான்வழி, தரைவழி மற்றும் கடல்வழி தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்பு படை
இந்த நிலையில், இரு தரப்பினருக்கிடையிலான போரில், இஸ்ரேலின் அதிகளவான பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, 500 இராணுவத்தினர் மற்றும் 57 காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |