தவறான கருத்துக்களை முன்வைக்கும் விஜயதாச ராஜபக்ச : ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டு!
சிறிலங்கா நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் அல்ல என அந்த கட்சி தெரிவித்துள்ளது.
கட்சி தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்திலேயே, இதனை குறிப்பிட்டுள்ளது.
விஜயதா ராஜபக்ச கட்சியின் முன்னாள் உறுப்பினராக இருந்தாலும், அவர் தற்போது வெளியிடும் அனைத்து கருத்துக்களும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்பாடுகளுக்கு ஏற்ப இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் சட்டங்கள்
இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்கள் தொடர்பில் அண்மை நாட்களில் விஜயதாச ராஜபக்ச பல கருத்துக்களை முன்வைத்து வருவதாக ஐக்கிய தேசிய கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
Want to make it clear that Wijedasa Rajapakse is not a UNPer, though he was once in the UNP. While he makes some interesting points about certain laws, his explanation for what happened to the economy and how to rebuild it is totally wrong. His thinking has always been SLFP-ish.
— United National Party (@UNPunOfficial) December 28, 2023
அத்துடன், இலங்கையில் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் அதனை கட்டியெழுப்புவது தொடர்பில் அவர் முன்வைக்கும் கருத்துக்கள் முற்றிலும் தவறானவை எனவும் அந்த கட்சி கூறியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |