சிறைச்சாலைகளாக மாறும் அரசாங்க கட்டடங்கள்(காணொளி)
Sri Lanka Police
Dr Wijeyadasa Rajapakshe
Drugs
By Kathirpriya
நாடு தழுவிய ரீதியில் தற்போது கைதுசெய்யப்படும் போதைப்பொருளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை தடுத்து வைக்க அரசாங்க கட்டடங்களை பயன்படுத்தப் போவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பதில் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் உத்தரவிற்கு அமைய நாடு தழுவிய ரீதியில் யுக்திய என்னும் தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த தேடுதல்களில் கைது செய்யப்படும் சந்தேகநபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது.
இவ்வாறு கைது செய்யப்படும் சந்தேகநபர்களை பயன்படுத்தப்படாத அரசாங்க கட்டடங்களில் தடுத்து வைக்க தீர்மானித்துள்ளாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மாலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி