60 இற்கும் மேற்பட்ட தொடருந்துகள் ரத்து: தொடரும் வேலைநிறுத்தம்
தொடருந்து சாரதிகளின் வேலைநிறுத்தம் காரணமாக இன்று 60க்கும் மேற்பட்ட தொடருந்து பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தொடருந்து சாரதி ஆட்சேர்ப்பு நடைமுறையில் நிலவும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இரண்டு புகையிரத நிலையங்கள் தொடர்பில் கடந்த 6ஆம் திகதி நள்ளிரவு ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது.
இதன் காரணமாக வாரத்தின் அலுவலகம் திறக்கும் நாளான நாளை (10) புகையிரத சேவையில் மேலும் தடங்கல்கள் ஏற்படக்கூடும் என தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கோரிக்கைகளுக்கு தீர்வு
எவ்வாறாயினும், பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதிலும், பணிப்புறக்கணிப்பை தொடர்வது நியாயமில்லை என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தொடருந்து சாரதிகள் குழுவிற்கு அடுத்த வாரத்தில் பதவி உயர்வு வழங்கப்படும் என தொடருந்து போக்குவரத்து அத்தியட்சகர் எம்.ஜே.இடிபோலகே தெரிவித்துள்ளார்.
அதன்படி 03ம் தரத்தில் உள்ளவர்கள் இரண்டாம் தரத்திற்கு உயர்த்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |