அதிகாலை நடந்த கோரவிபத்து - சாரதியின் கவனக்குறைவால் 17 பேர் படுகாயம்
Kilinochchi
Drivers
Negligence
Kadirgama
By MKkamshan
கிளிநொச்சியில் இருந்து கதிர்காமத்துக்கு பயணித்த பேருந்து, சாரதியின் கவனக்குறைவால் தடம்புரண்டு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சியில் இருந்து கதிர்காமத்துக்கு பயணித்த பேருந்து இன்று அதிகாலை பதியத்தலாவை கல்லோடை பாலத்துக்கு அருகில் சாரதி கண்ணயர்ந்ததால் பேருந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதில் பயணித்த 17 பேர் படுகாயமடைந்த நிலையில் மகாஓயா வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பதியத்தலாவை போக்குவரத்து காவல்துறையினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி