அதிகாலை நடந்த கோரவிபத்து - தந்தை, மகள் பலி!
Death
Accident
Colombo
Southern highway
By MKkamshan
அதிவேக நெடுஞ்சாலையில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மில்லெனிய மற்றும் தொடங்கொடை பகுதிக்கு இடையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு நோக்கி வந்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பாதுகாப்பு சுவரில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் மேலும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 39 வயதுடைய தந்தை மற்றும் 4 வயதுடைய மகள் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. .
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்