ஈரான் தலைநகரில் இறங்கி அடித்த மொசாட்!! ஈரானுக்கு இன்னமுமே தெரியவில்லை என்ன நடந்தது என்று!!
லெபனான் தலைநர் பெய்ரூட்டில் ஹமாசில் இராணுவத் தளபதி மீது இஸ்ரேல் மேற்கொண்ட துல்லியமான தாக்குதல், மற்றும் ஈரான் தலைநகர் டெஹரானில் ஹமாசின் தலைவர் இஸ்மயில் ஹணீயா மீது மேற்கொள்ளப்பட்ட துல்லியமான தாக்குதல் போன்ற இரண்டு தாக்குதல்களுமே மிகப் பெரிய ஆச்சரியங்களை ஏற்படுத்தி வருகின்றன ஈரானுக்கு.
தாம் எப்படித் தாக்கப்பட்டோம் என்று தெரியாமல் ஈரான் தொடர்ந்தும் தடுமாறிக்கொண்டிருப்பது என்பதுதான்- இங்கு இஸ்ரேல் பெற்றுள்ள மிகப் பெரிய வெற்றி என்று கூறுகின்றார்கள் நோக்கர்கள்.
ஈரான் தலைநகர் மீது தாக்குதல் இடம்பெற்று 24 மணி நேரத்துக்கும் அதிகமாகிவிட்டது.
குறிப்பிட்ட அந்தத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட ஒரு நபரைக்கூட ஈரானினால் அடையாளம் காண முடியவில்லை.
எப்படி அந்தத் தாக்குதல் நடைபெற்றது என்பது கூட ஈரானுக்கு உறுதியாகத் தெரியவில்லை.
தமது விழுந்தாளியைத் தாக்குவதற்கு எப்டியான ஆயுதம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது, எப்படியான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன, ஈரானின் அதி உயர் பாதுகாப்பு விவகாரங்கள் பற்றிய இரகசியங்கள் எப்படி எதிரியின் கைகளுக்குச் சென்றன – இவை போன்ற எந்த விடயங்களுமே ஈரானுக்கு இதுவரை தெரியவரவில்லை.
ஈரான் தலைநகர் டெஹரான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட அந்த ‘ஆச்சரியத் தாக்குதல்’ பற்றி ஆராய்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி: