ரஷ்யாவுக்குள் புகுந்த பயங்கரவாதிகள்! முகம் சிதைக்கப்பட்டு நீதிமன்றில் முன்னிலை
ரஷ்யா மொஸ்கோ இசை நிகழ்ச்சியில் தாக்குதல் நடத்தி 137 பேரை கொலை செய்த குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரில் மூவர் வளைந்த நிலையிலும் நான்காவது நபர் சக்கர நாற்காலியிலும் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக ரஷ்யா குற்றம் சுமத்தியுள்ளது.
ஐ.எல். ஆயுததார அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக உரிமை கோரி கானொளி வெளியிட்டிருந்தது.
எனினும் ரஷ்ய அரசாங்கம் உக்ரைன் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக குற்றம் சுமத்திய நிலையில் உக்ரைன் அதனை நிராகரித்துள்ளது.
குற்றத்தை ஒப்புக்கொண்ட இருவர்
கைது செய்யப்பட்ட நால்வர் மீது ரஷ்ய காவல்துறையினர் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் ஒருவருக்கு மின்சார அதிர்ச்சி கொடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
சந்தேக நபர்களின் முகங்களில் அடி காயங்கள் காணப்படுவதுடன் முகங்கள் வீங்கிய நிலையில் காணப்படும் கானொளிகளும் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் குறித்த சந்தேக நபர்களில் இருவர் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள நிலையில் மே மாதம் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் நால்வரும் தஜிகிஸ்தான் பிரஜைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.